வேலூர் அல்பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் அரபிக் கல்லூரின் அப்போதையை துணை முதல்வர் மவ்லானா H.கமாலுதீன் ஹஜ்ரத் (மர்ஹூம்) அவர்களும்,, பெங்களூர் சபீலுர் ரஷாத் அரபிக்கல்லூரியின் நிறுவனர் & முதல்வர் அபுஸ் ஸஊத், (அமீரே ஷரிஅத், கர்னாடகா) அவர்கள் இக்கல்லூரியைத் துவக்கி வைத்து அடிக்கல் நாட்டியது இக்கல்லூரிக்குக் கிடைத்த மாபெரும் பாக்கியமகும்.
வடகரை (மர்ஹூம்) மவ்லானா மௌலவீ B.முஹம்மது சுல்தான் பாஜில் தேவ்பந்த் அவர்களை முதல்வராகக் கொண்டு, பெரம்பலூர் மவ்லவி முஹம்மது முனீர் ஹஜ்ரத் அவர்களின் வீட்டு மாடியை வாடகைக்கு பிடித்து முதன் முதலாக இக்கல்லூரி செயல்படத் தொடங்கியது.
பெரம்பலூர் இஸ்லாமியப்; பெருமக்களின் ஒத்துழைப்பு முழுமையாக இக்கல்லூரிக்கு கிடைத்தது. மாணவர்களின் உணவுப் பொறுப்பை (லால்பேட்டை மத்ரஸாவை போன்று) முழுமையாக ஏற்றுக் கொண்டு, தங்கள் வீடுகளிலிருந்து மாணவர்களுக்கு உணவு அளித்து ஆதரவு நல்கி, இப்பகுதிக்கே ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள் என்பதை நாம் இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஆனால் வீடுகளிலிருந்து உணவு எடுத்து வருவதில் குறிப்பாக மழைக்காலங்களில் கால தாமதம் ஏற்பட்டு, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பாதிப்பு ஏற்படுவது போன்ற சில நடைமுறைச் சிரமங்களைக் கருத்தில் கொண்டு மூன்று வேளையும் கல்லூரியிலேயே உணவு சமைக்கும் ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகிகள் செய்து விட்டார்கள்
ஆனால் உணவுக்கு பதிலாக பிடி அரிசி திட்டம் ஒன்று தொடங்கப்பட்டது. (இஸ்லாமிய பெண்மணிகள், தங்கள் விடுகளில் தங்களுக்காக சமைக்க எடுக்கும் அரிசியில் ஒரு பிடியை கல்லூரியின் அரிசி சேமிப்புக் குடத்தில் சேமித்து வைப்பார்கள், அது நிறைந்தவுடன், கல்லூரிக்குக் கொண்டுவரப்பட்டு மாணவர்களின் உணவுக்குப் பயன்படுத்தப்படும்). இத்திட்டத்தில் பெரம்பலூர் முஸ்லிம்கள் மட்டுமல்ல சுற்று வட்டாரத்திலுள்ள அனைத்து ஊர் முஸ்லிம்களும் பங்குபெற்று, சிறப்பான ஆதரவினை நல்கினார்கள் அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் ஈருலக நற்பாக்கியங்களைத் தந்தருள்வானாக ! ஆமின் . முன்பு