அல்லாஹ்வின் பேரருளால் நூருல் முஸ்லிமீன் முன்னேற்றச் சங்கத்தாரால் 1987 ஆம் அண்டு ஜூலை மாதம் ஒன்பதாம் நாள் 12.11.1407 ஹிஜ்ரீ பெரம்பலூர் மாநகரில் இக்கல்லூரி தொடங்கப்பட்டது.
திருச்சிக்கும் சேலத்துக்கும் இடையிலுள்ள பெரம்பலூர் துறையூர் ஆத்தூர் மற்றும் பெரம்பலூரை மையமாக வைத்து அதன் சுற்று வட்டாரங்களில் அரபிக் கல்லூரி இல்லை. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வேண்டியும்,
மேலும் இப்பகுதியில் வாழும் மக்களுக்கிடையில் பெருகிவரும் அனாச்சாரங்கள், சீர்கேடுகள், மார்க்கத்துக்குப் புறம்பான செயல் பாடுகளைக் களைந்திட வேண்டும் என்ற எண்ணத்திலும் இக்கல்லூரி தொடங்கப்பட்டது. மேலும், இப்பகுதியில் மட்டுமல்ல, எல்லாப் பகுதிகளிலும் அறியாமை எனும் இருளை அகற்றி, மார்க்க ஞான ஒளியை ஏற்றிட வேண்டும் என்ற நோக்கத்திலும் இக்கல்லூரி தொடங்கப்பட்டது மேலும்